இந்தியாவையும் செஷல்ஸ் தீவையும் இந்தியப் பெருங்கடல் இணைப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்று (ஜூன் 28) உரையாற்றினார்.
நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டுவதில் இரு நாடுகளையும் ஒருங்கிணைப்பதில் இந்தியப் பெருங்கடல், பாலம் போன்று செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான செஷல்ஸுக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை முதல் 3 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
தில்லியில் இருந்து புறப்பட்டு விக்டோரியா விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமா் மோடியை அந்நாட்டு அதிபா் பேட்ரிக் மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனா். விமான நிலையத்தில் அவருக்கு அரசுமுறைப்படி வரவேற்பும், அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
செஷல்ஸ் நாட்டின் 50-ஆவது தேசிய தின விழா திங்கள்கிழமை (ஜூன் 29) நடைபெறவுள்ளது. அதிபா் பேட்ரிக் அழைப்பின்பேரில், இந்த விழாவில் பிரதமா் மோடி தலைமை விருந்தினராகப் பங்கேற்கவுள்ளாா்.
இதனிடயே, தனது பயணத்தின் ஒரு பகுதியாக செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி இன்று (ஜூன் 28) உரையாற்றினார்.
அந்நாட்டு அவையில் பிரதமர் மோடி பேசியதாவது:
''செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையோடு உங்கள் முன்பு நிற்கிறேன். இதன்மூலம், 140 கோடி மக்களின் அன்பு நிறைந்த வாழ்த்துகளை இந்த அவைக்கு கொண்டுவந்துள்ளேன். பிரதமராக பதவியேற்ற பிறகு 2015 ஆம் ஆண்டு நான் சந்தித்த, இந்தியப் பெருங்கடலில் உள்ள முதல் நாடு செஷல்ஸ்தான்.
இந்தியப் பெருங்கடல் குறித்த இந்தியர்களின் பார்வையில் செஷல்ஸ் சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளதால் நான் இங்கு வந்துள்ளேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு நமது தூதரக மையம் நிறுவப்பட்டதில் இருந்து நமது உறவு தொடங்கவில்லை. மாறாக, 1770 ஆகஸ்ட் முதலே நமது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு தொடங்கிவிட்டது.
இந்தியாவில் இருந்து 5 பேர் கொண்ட குழு, கப்பலில் பயணித்து செயின்ட் ஆனி தீவுக்குச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து பலர் அங்குச் செல்வதற்கான வாய்ப்பு உருவானது. இது நவீன செஷல்ஸ் உருவாக வழிவகுத்தது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு அரசாங்கத்தால் உருவானது அல்ல, மக்களால் உருவாக்கப்பட்டது.
இந்தியப் பெருங்கடல் இதனை சாத்தியமாக்கியுள்ளது. இந்தியப் பெருங்கடல் நம்மை பிரிக்கவில்லை. நம் இருவரையும் இணைக்கிறது. 50 வது ஆண்டு சுதந்திர தினத்தை உங்களுடன் கொண்டாட இங்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி.
கடல்சார் அண்டை நாடாக இருப்பதால், ஒருவரின் பாதுகாப்பை மற்றொருவர் உறுதி செய்ய முடிகிறது. ஒருவரின் செழிப்பு மற்றொருவரின் செழிப்புக்கு வழிவகுக்கிறது. கடல் மாகாணத்தின் நிலைத்தன்மை இரு நாடுகளுக்கும் பயன் அளிக்கிறது.
இந்தியப் பெருங்கடலை மேலும் பாதுகாப்பதில் இரு நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஒரே புள்ளியில் பிரதிபலிக்கிறது'' என பிரதமர் மோடி பேசினார்.
Summary
Indian Ocean does not separate India and Seychelles, it connects us PM Modi historic Seychelles address
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்களைக் கடவுளாகவும், ஜனநாயகத்தை கோயிலாகவும் கருதி பணியாற்றும் பிரதமர்: தில்லி முதல்வர்
உலகின் மிகவும் திறன்வாய்ந்த மையமாக இந்தியா: பிரதமர் மோடி
பிரான்ஸ்: முன்னணி நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு









