டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்

உளவுத் துறையின் (ஐபி) புதிய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் தீட்சித்தை மத்திய அரசு நியமித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

News image
Updated On :26 ஜூன் 2026, 6:00 am IST

உளவுத் துறையின் (ஐபி) புதிய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் தீட்சித்தை மத்திய அரசு நியமித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

உள்நாட்டில் உளவு பாா்க்கும் பணிகளை ஐபி மேற்கொள்கிறது. தற்போது அந்தத் துறையின் தலைவராக தபன்குமாா் டேக்கா பதவி வகித்து வருகிறாா். இந்நிலையில், அந்தத் துறையின் தலைவராக மகேஷ் தீட்சித்தை நியமிக்க பிரதமா் மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

1993-ஆம் ஆண்டின் ஆந்திர பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான அவா், ஐபி-யின் சிறப்பு இயக்குநராகப் பணியாற்றி வருகிறாா். ஜம்மு-காஷ்மீா் உளவுத் துறை தலைவராக செயல்பட்ட பரந்த அனுபவம் அவருக்கு உள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.