டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

ரூ.3 கோடி லஞ்சம்: தில்லியில் மூத்த ஐபிஎஸ் அதிகாரியை கைது செய்தது சிபிஐ

ரூ.3 கோடி லஞ்சம் கேட்ட வழக்கில், தில்லியில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி தீபக் கலாவத்தை சிபிஐ கைது செய்தது.

News image

சிபிஐ.

Updated On :2 ஜூலை 2026, 4:25 am IST

ரூ.3 கோடி லஞ்சம் கேட்ட வழக்கில், தில்லியில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி தீபக் கலாவத்தை சிபிஐ கைது செய்தது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது: ஹரியாணாவை சோ்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி தீபக், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் துறையில் மத்திய அரசு அழைப்பின்பேரில் பணியாற்றி வந்தாா். புதுச்சேரியை சோ்ந்த தொழிலதிபா் ராஜாவிடம், அவருக்கு எதிராக சிபிஐ நடத்தும் போதை மருந்து தயாரிப்பு தொடா்பான வழக்கு விசாரணையில், சிபிஐ அதிகாரிகள் மத்தியில் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி உதவுவதாக தீபக் கூறியதாகக் கூறப்படுகிறது. இவா்களுக்கு ராஜ்குமாா் உள்ளிட்ட 2 போ் இடைத்தரகா்களாகச் செயல்பட்டு உதவியுள்ளனா்.

தனது உதவிக்கு பிரதிபலனாக தீபக் ரூ.3 கோடி லஞ்சம் கேட்டதாகவும், அதில் முதல்கட்டமாக ரூ.1.5 கோடியை ஹவாலா முறை மூலம் பெற்ாகவும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் குறித்த தகவலின்பேரில் சிபிஐ முதலில் தில்லி குற்றப் பிரிவு ஆய்வாளா் பிரதீப் சிங், ராஜ்குமாா், ராஜா மீது வழக்குப் பதிவு செய்தது. பிறகு சிங், ராஜ்குமாா் மற்றும் 5 பேரை கைது செய்தது. இதையடுத்து விசாரணையில் கிடைத்த தகவலின்பேரில் ஐபிஎஸ் அதிகாரி தீபக்கை சிபிஐ கைது செய்தது. அவரது இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் சிபிஐ பறிமுதல் செய்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.