ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஜம்மு காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் "இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருந்தது, இருக்கிறது, எப்போதும் இருக்கும்" என்றும் இந்தியா மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 62 ஆவது அமர்வில் பேசிய, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் முதல் செயலாளர் அனுபாமா சிங், பாகிஸ்தான் தனது உள்நாட்டு தோல்விகளை மறைக்கவும், பயங்கரவாதத்திற்கு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவை திசைதிருப்பவும் ஐ.நா. மன்றைங்களை பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு-காஷ்மீா் குறித்து பாகிஸ்தான் சுமத்தும் அடிப்படை ஆதாரமற்ற மற்றும் தீய நோக்கமுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இங்கு பாகிஸ்தான் எழுப்பும் வெற்று முழங்கங்களால் பயனில்லை. இத்தகைய குற்றச்சாட்டுகள் மூலம் பாகிஸ்தான் தனது உள்நாட்டுத் தோல்விகளையும் பயங்கரவாதத்திற்கான ஆதரவையும் மறைக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பதவியை அது தவறாகப் பயன்படுத்துவது இந்த ஏமாற்று வேலையை மேலும் வலுப்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதியாக தெரிவித்த சிங், "ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தது, இருக்கிறது, எப்போதும் இருக்கும். பாகிஸ்தான் இந்தியப் பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பதும், அவற்றை மீண்டும் திருப்பித் தருவதும் மட்டுமே தீர்க்கப்படாத பிரச்னை என்றும், அந்த பகுதிகளை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் அவர் கூறினார்.
சமீபத்திய வாரங்களில் நடைபற்ற போராட்டங்களும் அமைதியின்மையும், நீண்டகாலமாக நிலவி வரும் நிர்வாகம் மற்றும் மனித உரிமைகள் குறித்த கவலைகளைப் பிரதிபலிப்பதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
ராவலகோட்டில் தொடரும் துயரச் சம்பவங்கள், நூற்றுக்கணக்கான மக்கள் படுகொலை மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் முழுவதும் நடைபெறும் கொடூரமான அடக்குமுறை போன்றவை, வலுக்கட்டாய ஆக்கிரமிப்பின் மீது கட்டமைக்கப்பட்டு, அடக்குமுறையின் மூலம் நிலைநிறுத்தப்பட்ட ஒரு அமைப்பின் விளைவுகளாகும்.
பல தசாப்தங்களாக நடைபெறும் ராணுவ நில அபகரிப்புகள், மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் மறுக்கப்படுதல் ஆகியவை, மின்சாரம், உரிமைகள் மற்றும் கண்ணியம் போன்ற அடிப்படை கோரிக்கைகள் கூட துப்பாக்கிக் குண்டுகளாலும் கொடூரத்தாலும் எதிர்கொள்ளப்படும் ஒரு நிலைக்கு நிலைமையைக் கொண்டு வந்துள்ளன என்று சிங் கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் முன்வைக்கும் உரிமைகோரல்கள் கள யதார்த்தத்தை மாற்றியமைக்காது என்று இந்தியா தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியதுடன்; பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒடுக்குமுறையையும் அது சுட்டிக்காட்டியது.
Summary
India strongly rejected Pakistan’s allegations and references to Jammu and Kashmir made by Pakistan and the Organisation of Islamic Cooperation (OIC) at the United Nations...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வணிக கப்பல்கள் மீதான தாக்குதல்கள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கண்டனம்

ஐ.நா.வில் ஜம்மு - காஷ்மீா் விவகாரம்: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

ஆப்கனில் பாகிஸ்தான் தாக்குதல்: ஐ.நா.வில் இந்தியா கண்டனம்
சொந்த மக்களையே இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்: ஐ.நா. அவையில் இந்தியா கடும் தாக்கு
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu




