சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

ஒடிசாவில் ஏவுகணை சோதனை: 11,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!

ஒடிசாவில் ஏவுகணை சோதனைக்காக 11,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

News image

ஒடிஸா மாநிலத்தில் கடந்த மாதம் சோதனை செய்யப்பட்ட நவீன ‘எம்ஐஆா்வி’ ஏவுகணை. - கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2026, 7:09 pm IST

ஒடிசாவில் ஏவுகணை சோதனைக்காக 11,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (டி.ஆர்.டி.ஓ) ஒடிசாவின் சந்திப்பூர் நகரில் ஏவுகணை சோதனை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், ஏவுதளத்தை சுற்றி 3.5 கி.மீ. பகுதியில் வசித்த 11,442 குடியிருப்பு வாசிகளை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

ஏவுகணை மற்றும் சோதனை பற்றிய விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படாமல் தேசிய பாதுகாப்பு நலன் கருதி ஒத்துழைக்குமாறு மக்களிடம் அரசு நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.

வெளியேற்றப்பட்ட மக்கள் அனைவரும் பர்தான்பூர், பீம்பூர் மற்றும் துந்த்ரா கிராமங்களில் உள்ள புயல் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ”மக்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அத்தியவசியத் தேவைகள் வழங்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் ஒரு நாளைக்கான ஊதியமும் வழங்கப்பட்டுள்ளது” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

வெளியேற்றப்பட்ட மக்கள் அனைவரும் ஏவுகணை சோதனை முடிந்த பின்னர் வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புத் துறையுடன் ஆலோசித்தே இந்த வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலசோர், பத்ரக் மற்றும் கேந்தர்பரா கடல்பகுதிகளில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டனர்.

Summary

Missile test in Odisha: Over 11,000 people evacuated.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.