17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கரப்பான்பூச்சி கட்சி போராட்டம்? - தில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி போராட்டம் அறிவித்ததைத் தொடர்ந்து, தில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது பற்றி...

News image

தில்லியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள். - படம் - பிடிஐ

Updated On :6 ஜூன் 2026, 9:00 am IST

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி, போராட்டம் அறிவித்ததைத் தொடர்ந்து, தில்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சனிக்கிழமை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே, அமெரிக்காவிலிருந்து இந்தியா வருவதாகவும், தில்லியில் தர்மேந்திர பிரதான் ராஜிநாமாவைக் கோரி அமைதி வழியில் இன்று போராட்டம் நடத்த இருப்பதாகவும் பேசி விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக தில்லி காவல்துறைனர், இதுவரை, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியிடமிருந்து போராட்டத்துக்கு எந்த அனுமதியும் பெறவில்லை என்று நேற்று தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, தற்போது வரை போராட்டத்துக்கான அனுமதி பெறவில்லை என்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை வைத்து தில்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கட்சியின் செய்தித்தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா கூறுகையில், ”அபிஜித் திப்கே இந்தியா வந்துவிட்டார். அதுபற்றி அவரும் பதிவிட்டுள்ளார். இது இந்திய அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக அமையும் என நாங்கள் நம்புகிறோம்.

விரைவில் அவர் வெளியே வருவார். நாங்கள் காவல் நிலையத்திற்குச் செல்வோம். அங்கு, தில்லி காவல்துறையிடம் அனுமதி கேட்போம். அதன் பிறகு நாங்கள் ஜந்தர் மந்தரில் அமர்வோம்” என்று தெரிவித்தார்.

மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புது தில்லி மற்றும் பிற முக்கிய இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Security arrangements across Delhi have been intensified on Saturday following the announcement of a protest by the 'Cockroach People's Party'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.