கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்த அனுமதி கோரவில்லை என்று தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி ஒருவரின் விமர்சனத்தால் கோபமடைந்த இளைஞர்கள், அந்த வார்த்தையையே தங்களின் அடையாளமாக மாற்றி, கடந்த மே 16 ஆம் தேதி அபிஜித் திப்கே என்ற டிஜிட்டல் கிரியேட்டர் தலைமையில் 'கரப்பான்பூச்சி மக்கள் கட்சி' (சிஜேபி) என்ற நையாண்டி பக்கத்தை முகநூல் மற்றும் எக்ஸ் தளங்களில் தொடங்கினர். அண்மையில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே வரும் ஜூன் 6 ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து இந்தியா வருவதாகவும், தில்லியில் தர்மேந்திர பிரதான் ராஜிநாமாவைக் கோரி அமைதி வழியில் போராட்டம் நடத்த இருப்பதாகவும் பேசி விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பாக தில்லி காவல்துறை, “இதுவரை, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியிடமிருந்து போராட்டத்துக்கு எந்த அனுமதியும் பெறவில்லை என்றும், அனுமதி கேட்கும் பட்சத்தில் அதைப் பரிசீலிப்போம் என்றும்” தெரிவித்தனர்.
மேலும், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் பதற்றமான பகுதிகளில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக காவல்துறையினர் தயாராக உள்ளனர் என்றும் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில், போராட்டத்துக்கு வருவதற்காக ஏற்கெனவே அமெரிக்காவிலிருந்து அபிஜித் திப்கே புறப்பட்ட்டுவிட்டார். அனுமதி பெறாமலேயே போராட்டம் குறித்த தகவல்கள் அடங்கிய போஸ்டர் ஒன்றை அந்தக் கட்சி தனது அதிகாரபூர்வ சமூக ஊடகதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The Delhi Police stated on Friday that no permission was sought to hold a protest on behalf of the 'Cockroach Janata Party'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










