தேர்வுக் குளறுபடிகள் தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக போட்டித் தேர்வுகளில் குளறுபடிகளுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்தப் போராட்டத்தைக் குறிப்பிட்டு, ஒன்றுகூடிய கரப்பான் பூச்சிகள் என்றும் கட்சியின் அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே பங்கேற்றுள்ள நிலையில், பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
போலிச் சான்றிதழ்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது நாட்டில் வாழும் வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் குறிப்பிட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின.
இந்த கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில் ஆம் ஆத்மியின் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றிய அபிஜித் தீப்கே, ’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி - Cockroach Janta Party) என்ற பெயரில் சமூக ஊடகப் பக்கங்களைத் தொடங்கினார்.
அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாத நிலையில், வேலையில்லாமல், சோம்பேறியாக, ஆன்லைனில் எப்போதும் மூழ்கிக் கிடக்கும், ஆவேசமாக பேசும் திறன் கொண்ட இளைஞர்கள் இணையலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.
ஜென் ஸி, இளைஞர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என அரசியல் தலைவர்களும் இதில் இணைந்தனர்.

Summary
Cockroach Janta Party's (CJP) supporters stage a protest, demanding the resignation of Union Education Minister Dharmendra Pradhan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எதிரொலி: வேலைவாய்ப்பு கோரி மதுரையில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பேரணி

நீட் மறுதேர்வு: கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நடத்த அமைச்சர் அறிவுறுத்தல்!






