திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இந்தியா வந்தார் அபிஜித் திப்கே! தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்துக்கு அனுமதி!

தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது குறித்து...

News image

தில்லி போராட்டத்தில் கலந்துகொள்ள கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே இந்தியா வந்தடைந்தார்... - X, PTI

Updated On :6 ஜூன் 2026, 11:24 am IST

தில்லியில், கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நடத்தும் போராட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இளைஞர்களை கரப்பான்பூச்சி என விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அபிஜித் திப்கே என்பவர் தொடங்கிய கரப்பான்பூச்சி மக்கள் கட்சி எனும் சமூக வளைதளப் பக்கத்துக்கு இந்திய இளைஞர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, மாபெரும் இயக்கமாக உருவாகியுள்ள கரப்பான்பூச்சி மக்கள் கட்சி, நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்குத் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றது.

இந்த நிலையில், நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி தில்லியில் இன்று (ஜூன் 6) போராட்டம் நடைபெறும் என கரப்பான்பூச்சி மக்கள் கட்சி அறிவித்திருந்தது. இந்தப் போராட்டத்துக்கு, தில்லி காவல் துறையினர் தற்போது அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள, அபிஜித் திப்கே அமெரிக்காவில் இருந்து தில்லி வந்தடைந்தார். மேலும், ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டுள்ள நிலையில், தில்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதுபற்றி, இந்தியா வந்துள்ள அபிஜித் திப்கே தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது:

“உங்கள் அனைவரையும் ஜந்தர் மந்தரில் சந்திக்கக் காத்திருக்கிறேன். ஒரு புத்தகத்தையும் நமது தேசிய கொடியையும் எடுத்துவர மறந்துவிடாதீர்கள்.

அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக, காவல் துறையினருக்கு பூக்களை வழங்குங்கள். இந்த இயக்கத்தை அன்பு மற்றும் அமைதியால் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Summary

The police have granted permission for the protest organized by the 'Cockroach People's Party' in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.