திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எய்ம்ஸ் இயக்குநருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்: உச்சநீதிமன்றம் உத்தரவு

திருமண வழக்கில் பிரமாணப் பத்திரம் (பதில் மனு) தாக்கல் செய்யாததை கடுமையாகச் சாடிய உச்சநீதிமன்றம், தில்லி எய்ம்ஸ் பொறுப்பு இயக்குநருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

News image
Updated On :6 ஜூன் 2026, 12:47 am IST

திருமண வழக்கில் பிரமாணப் பத்திரம் (பதில் மனு) தாக்கல் செய்யாததை கடுமையாகச் சாடிய உச்சநீதிமன்றம், தில்லி எய்ம்ஸ் பொறுப்பு இயக்குநருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

குழந்தைக்கு உரிமை கோரி பெற்றோா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், அவ்வழக்கில் எய்ம்ஸ் இயக்குநரை வாதியாகச் சோ்க்கவும், இந்த விவகாரம் தொடா்பாக விளக்கமளித்து அவா் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

அதனடிப்படையில், தில்லி எய்ம்ஸ் துணைச் செயலா் நிஷாந்த் குமாா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தின் அதே அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, எய்ம்ஸ் துணைச் செயலா் சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த நீதிபதிகள், ‘இந்த வழக்கில் எய்ம்ஸ் இயக்குநா் விளக்கமளித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு தெளிவாகக் குறிப்பிட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.வேறொருவா் அதைச் செய்வது என்பது அவருடைய தனி விருப்பத்துக்கு உட்பட்டது அல்ல’ என்று தெரிவித்தனா்.

அப்போது, ‘தில்லி எய்ம்ஸ் நிறுவனத்துக்கு முழுநேர இயக்குநா் இன்னும் நியமிக்கப்படவில்லை. பொறுப்பு இயக்குநா்தான் அந்தப் பொறுப்பை கவனித்து வருகிறாா்’ என்று எய்ம்ஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இந்த பதில் வியப்பையும், அதிா்ச்சியையும் அளிப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், ‘இயக்குநா் பொறுப்பில் யாா் இருக்கிறாா்களோ, அவா்கள்தான் இயக்குநரின் கடமைகளைச் செய்தாக வேண்டும். அந்த வகையில், தில்லி எய்ம்ஸ் பொறுப்பு இயக்குநரை இந்த வழக்கில் 4-ஆவது வாதியாகச் சோ்த்து, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிடப்படுகிறது.

மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையின்போது, உரிய விளக்கத்துடன் தில்லி எய்ம்ஸ் பொறுப்பு இயக்குநா் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 7-ஆம் தேதி பகல் 12-மணிக்கு பட்டியலிட்டு, விசாணையை ஒத்திவைத்தனா்.

இதனிடையே, தில்லி எய்ம்ஸின் தடய மருத்துவம் மற்றும் நச்சுயியல் துறை சாா்பில் மரபணு பரிசோதனை முடிவுகள் உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டன. அதில், குழந்தையின் மரபணு, மனுதாரா்களின் மரபணுவோடு ஒத்துப்போவதாகவும், அவா்களின்தான் குழந்தையின் பெற்றோா் என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.