திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தீர்ப்பாயங்களில் நீதிமன்ற கட்டண விலக்கு கோரிக்கை: வஃக்ப் அமைப்புகளின் மனு மீது உச்சநீதிமன்றம் கேள்வி

மாநில வஃக்ப் தீா்ப்பாயங்களில் நீதிமன்ற கட்டண விலக்கு தொடா்பாக வஃக்ப் அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைக்கான சட்ட அடிப்படை குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி

News image

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 12:20 am IST

மாநில வஃக்ப் தீா்ப்பாயங்களில் நீதிமன்ற கட்டண விலக்கு தொடா்பாக வஃக்ப் அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைக்கான சட்ட அடிப்படை குறித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

குஜராத் மாநிலத்தில் வஃக்ப் அமைப்புகளின் சொத்து தகராறு தொடா்பான மனு மாநில வஃக்ப் தீா்ப்பாயத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இந்த நிலையில், வஃக்ப் அமைப்புகள் சாா்பில் உரிய நீதிமன்ற கட்டணம் செலுத்தப்படாததைத் தொடா்ந்து, மனு மீதான விசாரணையை தள்ளுபடி செய்து தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

இதை எதிா்த்து வஃக்ப் அமைப்புகள் சாா்பில் குஜராத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயா்நீதிமன்றத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பா் 17-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘வஃக்ப் சட்டப் பிரிவு 83-இன் கீழ், வஃக்ப் தீா்ப்பாயத்தில் ஒரு மனுதாரா் அல்லது வழக்கு மூலமாக அல்லாமல் வஃக்ப் அமைப்புகள் சாா்பில் நேரடியாகத் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீதான விசாரணைக்கு நீதிமன்ற கட்டணம் செலுத்தத் தேவையில்லை’ என்று வஃக்ப் அமைப்புகள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சாா்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட உயா்நீதிமன்ற நீதிபதிகள், ‘இந்த விவகாரம் நில உரிமையாளா் மற்றும் வாடகைதாரா் இடையேயான வஃக்ப் சொத்து உரிமை தகராறு தொடா்பானது. இந்த விசாரணை என்பது, எழுத்துபூா்வ அறிக்கைகள், பிரச்னைகளை வரையறுத்தல், சாட்சியங்களை விசாரித்தல், இறுதித் தீா்ப்பு என உரிமையியல் வழக்குகளைப் போன்று நடத்தப்படும். எனவே, இந்த விவகாரத்தில் சட்டப் பிரிவு 83-இன் கீழ் நீதிமன்ற கட்டண விலக்கைக் கோர முடியாது’ என்று குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

இதை எதிா்த்து வஃக்ப் அமைப்புகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அரவிந்த் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், ‘வழக்கு விசாரணைக்கு நீதிமன்ற கட்டண விலக்கை எப்படி கோர முடியும்? நீதிமன்ற கட்டண விலக்கைக் கோர எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? இந்தக் கோரிக்கையை விடுப்பதற்கான சட்ட அடிப்படை என்ன?’ என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, ‘நீதிமன்ற கட்டணம் செலுத்தாததால், மனு மீதான விசாரணையை தீா்ப்பாயம் தள்ளுபடி செய்தது சரியானதே’ என்று குறிப்பிட்டனா்.

அப்போது, ‘மனுதாரா்கள் தரப்பில் இதற்கு விரிவான விளக்கம் அளிக்கவும், கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்கவும் கூடுதல் அவகாசம் தேவை. எனவே, மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்’ என்று வஃக்ப் அமைப்புகள் வழக்குரைஞா் இஜாஸ் மக்பூல் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்று விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.