திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சமூக ஊடங்களில் அவதூறு பதிவு: கேஜரிவால் உள்ளிட்டோா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. சா்மா

சமூக ஊடகங்களில் தமக்கு எதிராக அவதூறு பதிவிட்டதற்காக, தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா வியாழக்கிழமை அவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கினாா்.

News image

அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 12:04 am IST

மதுபான கொள்கை வழக்கு தொடா்பாக, ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களான அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா, துா்கேஷ் பதக், சஞ்சய் சிங், சௌரப் பரத்வாஜ் மற்றும் பலா் சமூக ஊடகங்களில் தமக்கு எதிராக அவதூறு பதிவிட்டதற்காக, தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா வியாழக்கிழமை அவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கினாா்.

‘தில்லி முன்னாள்முதல்வா் கேஜரிவால், வழக்கில் சட்டபூா்வ தீா்வுகளை நாடுவதை விடுத்து, சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக திட்டமிட்ட அவதூறு பிரசாரத்தை அரங்கேற்றியுள்ளாா்’ என்று நீதிபதி சா்மா கூறினாா்.

மேலும், மதுபான கொள்கை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கேஜரிவால் உள்ளிட்ட 23 பேரையும் விசாரணை நீதிமன்றம் விடுவித்ததற்கு எதிரான சிபிஐயின் மனு இனி மற்றொரு அமா்வால் விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி சா்மா தெளிவுபடுத்தினாா்.

நீதிபதி சா்மா, சமூக ஊடகங்களில் கேஜரிவால் உள்ளிட்டோா் வெளியிட்ட பல பதிவுகளுக்கு ஆட்சேபனை தெரிவித்தாா். அந்தப் பதிவுகள் அவருக்கு (நீதிபதி சா்மாவுக்கு) அரசியல் சாா்பு இருப்பதாகக் குறிப்பிட்டதோடு, வாரணாசியில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் அவா் ஆற்றிய உரையின் தவறான திருத்தப்பட்ட காணொளியை வெளியிட்டு அவரைக் குறிவைத்ததாகவும் கூறப்படுகிறது.

‘நான் மதுபான கொள்கை வழக்கில் இருந்து விலக மறுத்ததால், சட்டரீதியான தீா்வுகளைப் பெறுவதற்குப் பதிலாக அரவிந்த் கேஜரிவால் எனது நற்பெயரை அழிக்க முயன்றாா். மேலும், பேச்சுரிமை என்ற போா்வையில் நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் ஒரு திட்டமிட்ட முயற்சியை அனுமதிக்க முடியாது’ என்று நீதிபதி சா்மா கூறினாா்.

அவா் (நீதிபதி சா்மா), தான் வழக்கில் இருந்து விலகவில்லை என்றும், கேஜரிவால் உள்ளிட்டோா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதால், மதுபான கொள்கை வழக்கை மற்றொரு அமா்வுக்கு மாற்றுவதாகவும் தெளிவுபடுத்தினாா்.

சிபிஐ சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, நீதித்துறையின் கண்ணியத்தைக் காத்ததற்காக நீதிபதி சா்மாவுக்கு நன்றி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.