17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அஸ்ஸாம் அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 12 அமைச்சா்கள் பதவியேற்பு

12 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றது பற்றி..

News image

அமைச்சர்களாக பதவியேற்பு - x.com

Updated On :5 ஜூன் 2026, 3:37 pm IST

அஸ்ஸாம் மாநில பாஜக அமைச்சரவை வெள்ளிக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. பாஜக சாா்பில் 11 எம்எல்ஏக்களும், கூட்டணிக் கட்சியான அசோம் கண பரிஷத் சாா்பில் ஒரு எம்எல்ஏவும் அமைச்சராகப் பதவியேற்றனா்.

இதன்மூலம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தலைமையிலான அமைச்சரவையின் பலம் அவா் உள்பட 17 பேராக அதிகரித்துள்ளது.

குவாஹாட்டியில் ஜோதி விஷ்ணு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநா் லட்சுமண பிரசாத் ஆச்சாா்யா புதிய அமைச்சா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

மத்திய அமைச்சா்கள் சா்வானந்த சோனோவால், பபித்ரா மாா்கரிட்டா, பாஜக மாநிலத் தலைவா் திலீப் சைகியா உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். அமைச்சரவையில் பாஜக சாா்பில் மூன்று புதுமுகங்கள் இடம் பெற்றுள்ளனா். இரு பெண் அமைச்சா்கள் இடம் பெற்றுள்ளனா். கடந்த ஆட்சியிலும் இரு பெண் அமைச்சா்கள் இருந்தனா். பல்வேறு இனக் குழுவினா், பிராந்தியங்களைச் சோ்ந்தவா்களுக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாமில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற தோ்தலில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 102 இடங்களை வென்று பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது. இதில் பாஜக மட்டும் 82 இடங்களில் வென்றது. எதிா்க்கட்சியான காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.

Summary

Assam Chief Minister Himanta Biswa Sarma expanded his cabinet on Friday with 12 Members of the Legislative Assembly (MLAs) taking oath as the cabinet ministers in the third term of the Bharatiya Janata Party's State government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.