கர்நாடகத்தில் அமைந்திருப்பது சித்தராமையா அமைச்சரவை; சிவகுமாருடையது அல்ல என்று பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தின் முதல்வராக இருந்த சித்த ராமையா காங்கிரஸ் மேலிட உத்தரவின் பேரில், அவர் பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, தற்போதைய முதல்வராக டி.கே. சிவகுமார் நேற்று (ஜூன் 6) பதவியேற்றார். மேலும், அவருடன் 13 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இது குறித்து விஜயேந்திரா பேசியதாவது:
டி.கே. சிவகுமார் மாநில முதல்வாரனதன் மூலம் தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றியுள்ளார். அமைச்சர்கள் பட்டியலைப் பார்க்கும்போது, இது சிவகுமாரின் அமைச்சரவை அல்ல; மாறாக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் அமைச்சரவை என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில் அனைவரையும் தன்பக்கம் அழைத்துச் செல்வதற்கான வேலைகளை சிவகுமார் செய்வார். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவர பாஜக எப்போதும் தயாராக உள்ளது என்று கூறினார் விஜயேந்திரா.
இந்த நிலையில், அமைச்சரவையில் ஒரு பெண் கூட இடம்பெறாத விவகாரம் பேசுபொருள் ஆகியுள்ளது. இதையும் பாஜகவினர் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
BJP State President Vijayendra stated on Thursday that the cabinet in Karnataka is Siddaramaiah's, not Shivakumar's.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராகுல் காந்தியின் ரிமோட் கட்டுப்பாட்டில் டி.கே. சிவகுமாரின் அரசு! - பாஜக விமர்சனம்!

கர்நாடக முதல்வராக பதவியேற்றார் டி. கே. சிவகுமார்! விழாவில் ராகுல், கார்கே பங்கேற்பு!

சித்தராமையா காலில் விழுந்து ஆசி பெற்ற டி.கே. சிவக்குமார்!








