தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராகுல் காந்தியின் ரிமோட் கட்டுப்பாட்டில் டி.கே. சிவகுமாரின் அரசு! - பாஜக விமர்சனம்!

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரின் அரசை ராகுல் காந்தி கட்டுப்படுத்துவதாக மாநில பாஜக விமர்சனம்...

News image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார். - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 4:58 pm IST

ராகுல் காந்தி மற்றும் சித்தராமையா ஆகியோரின் ரிமோட் கட்டுப்பாட்டில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரின் அரசு இயங்கி வருவதாக, மாநில பாஜக விமர்சித்துள்ளது.

கர்நாடகத்தில், காங்கிரஸ் ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் சித்தராமையா பதவி விலகினார். இதையடுத்து, புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் கடந்த புதன்கிழமை (ஜூன் 3) மாலை பதவியேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரின் ரிமோட் கட்டுப்பாட்டில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரின் அரசு இயங்கி வருவதாக, கர்நாடக பாஜக மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். அசோகன் விமர்சித்துள்ளார்.

இதுபற்றி, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

“பழைய படத்தின் புதிய போஸ்டரைபோல அரசின் போஸ்டர் மட்டுமே மாறியுள்ளது. முதல்வர் வீட்டின் பெயர்ப்பலகை மாறியுள்ளது; ஆனால், மக்களின் பிரச்னைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. அமைச்சரவையில் எந்தவொரு புதுமுகங்களும் இல்லை. இது அர்த்தமுள்ள மாற்றமாகவும் இல்லை. மக்கள் நல்லாட்சியை எதிர்பார்த்தபோது, ​​காங்கிரஸ் வெறும் நாற்காலிகளை மட்டுமே மாற்றியுள்ளது.

ஒப்பந்ததாரர்கள் தங்களுக்குரிய தொகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வட கர்நாடகத்தில் உள்ள பள்ளிகளில் வளர்ச்சிகள் தேவைப்படுகின்றன மற்றும் அடிப்படை நிர்வாகம் அங்கு இல்லை” எனக் கூறியுள்ளார்.

Summary

BJP has criticized the government of Karnataka CM D.K. Shivakumar is being controlled remotely by Rahul Gandhi and Siddaramaiah.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.