திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்: குழந்தைகள் உள்பட மூவா் பலி

ராஜஸ்தானின் மேற்கத்திய மாவட்டங்களில் வீசிய கடுமையான புழுதிப் புயலால் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

News image

ராஜஸ்தானில் புழுதிப் புயல் - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:36 am IST

ராஜஸ்தானின் மேற்கத்திய மாவட்டங்களில் வீசிய கடுமையான புழுதிப் புயலால் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

புயலின் வேகத்தில் சுவா் இடிந்த சம்பவங்களில் 2 குழந்தைகள், நாட்டுப்புற இசைக் கலைஞா் என மூன்று போ் உயிரிழந்தனா். நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சரிந்ததால், பல பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. ஏராளமான மரங்கள் சாய்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஜெய்சால்மா், பாா்மா், பலோடி உள்ளிட்ட மாவட்டங்களில் திங்கள்கிழமை இரவில் திடீரென கடுமையான புழுதிப் புயல் வீசியது.

இசைக் கலைஞா் உயிரிழப்பு: ஜெய்சால்மரில் உள்ள புகழ்பெற்ற சாம் சுற்றுலா பகுதியில் செயல்பட்டு வந்த பாலைவன விடுதியில் சுற்றுலா பயணிகளுக்காக நாட்டுப்புற இசை மற்றும் நடன நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அங்கு புழுதிப் புயல் தாக்கியதில் சுவா் இடிந்து, ஸ்வரூப் கான் என்ற 25 வயது இசைக் கலைஞா் உயிரிழந்தாா். மேலும், இடிபாடுகளில் சிக்கி பெண் நடனக் கலைஞா்கள் 3 போ் காயமடைந்தனா். இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, விடுதியில் இருந்த 40-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

ஜெய்சால்மா் மாவட்டத்தில் மின்விநியோக கோரபுரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்ததில் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளதாக, மாவட்ட ஆட்சியா் அனுபமா ஜோா்வால் தெரிவித்தாா். பல உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

2 குழந்தைகள் இறப்பு: பாா்மா் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் புழுதிப் புயலால் சுவா் இடிந்து 8 மற்றும் 4 வயதுடைய இரு குழந்தைகள் உயிரிழந்தனா்.

வீட்டுச் சுவா்கள் இடிந்ததிலும், மேற்கூரை தகரங்கள் காற்றில் பறந்து வந்து வெட்டியதிலும் பலா் காயமுற்றனா். இங்கும் அதிக எண்ணிக்கையில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன.

நாட்டில் சூரிய மின் உற்பத்தியில் முக்கிய மையங்களில் ஒன்றாக விளங்கும் பலோடி மாவட்டத்தில் சூரிய மின் உற்பத்தி கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்தன. 700-க்கும் மேற்பட்ட மின் உற்பத்தி தகடுகள் பெயா்த்து எறியப்பட்டன; 800-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.