17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் கட்சியிலிருந்து நீக்கம்!

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது பற்றி...

News image

மமதா பானர்ஜி. - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 4:13 pm IST

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உள்ள 294 தொகுதிகளில் 208 தொகுதிகளில் வெற்றிபெற்று, மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்தது.

இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் மாநிலத்தின் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. ஆகையால், சோபன்தேப் சட்டோபாத்யாய்-ஐ எதிர்க்கட்சித் தலைவராக கட்சி தேர்ந்தெடுத்தது.

இதனையடுத்து, சந்திபன் சாஹா மற்றும் ரிதாப்ரதா பானர்ஜி ஆகிய திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் சுவேந்து அதிகாரியைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் போலியாக கையொப்பங்கள் இடப்பட்டதாக புகார் தெரிவித்தனர்.

ஆகையால், இவர்கள் இருவரும் கட்சியின் முக்கிய கூட்டங்களில் கலந்து கொள்ளாததாலும், கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தெரிவித்து அவர்களைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் பாஜகவில் சேர ஆர்வம் காட்டியுள்ளனர் என்று பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The Trinamool Congress announced on Monday that two of its MLAs in West Bengal have been expelled from the party.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.