தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மேற்கு வங்கத்தில் அமைச்சரவை விரிவாக்கம்: 35 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு!

மேற்கு வங்கத்தில் மேலும் 35 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றது குறித்து...

News image

பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர். - படம் - ஏஎன்ஐ

Updated On :1 ஜூன் 2026, 5:57 pm IST

மேற்கு வங்கத்தில் மேலும் 35 பேர் அமைச்சர்களாக திங்கள்கிழமை பதவியேற்றனர்.

மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உள்ள 294 தொகுதிகளில் 208 தொகுதிகளில் வெற்றிபெற்று, மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்தது. அதன்படி, மாநிலத்தின் முதல்வராக சுவேந்து அதிகாரியும் அவருடன் ஐந்து அமைசர்களும் கடந்த மே 9 ஆம் தேதி பதவியேற்றனர்.

இந்த நிலையில், சுவேந்து அதிகாரி அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதற்கான முன்மொழிவை அந்த மாநில ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வழங்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள லோக் பவனில் நடந்த இந்தப் பதவியேற்பு விழாவில், மேலும் 35 எம்.எல்.ஏ.க்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதன்மூலம், மேற்கு வங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை முதல்வர் உள்பட 41 ஆக அதிகரித்தது. மேலும், அரசியலமைப்பு சட்டத்தின்படி மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகள் உள்ளதால் அதில் 15 சதவிகிதம் அதாவது 44 பேர் அமைச்சரவையில் இடம்பெறலாம்.

மேலும், புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கான துறைகள் வரும் புதன்கிழமை ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

In West Bengal, 35 more members took oath as ministers on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.