ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜெ.பி. நட்டாவுக்கு அரசியல் பிடிக்கவில்லையா? ராஜிநாமா செய்யட்டும்! அபிஜீத் தீப்கே

போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஜெ.பி. நட்டா கூறிய நிலையில் அபிஜீத் தீப்கே பதில்...

cockroach janata party Abhijeet Dipke

அபிஜீத் தீப்கே - எக்ஸ்

Published On :23 ஜூலை 2026, 12:33 pm IST

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவுக்கு அரசியல் பிடிக்கவில்லை என்றால், ராஜிநாமா செய்யட்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே இன்று (ஜூலை 23) விமர்சித்தார்.

போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஜெ.பி. நட்டா கூறிய நிலையில், அரசியல் பிடிக்கவில்லையென்றால் ராஜிநாமா செய்யுங்கள் என தீப்கே குறிப்பிட்டார்.

நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் ஜூன் 20 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் கலந்துகொண்டு உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவரின் உண்ணாவிரதப் போராட்டத்தின் 20ஆம் நாளில் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

முன்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவையடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்தவாறு இன்று (ஜூலை 22) 26 வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர்.

இந்தப் பேரணியில் ஈடுபட்ட இளைஞர்களை காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் தடுத்தனர். பெண்கள் உள்பட சிறுமிகளின் மீதும் காவல்துறை தாக்குதல் நடத்தியது. இதில் இளைஞர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.

எனினும் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு திரைப் பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் ஜெ.பி. நட்டா, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் விவாதிக்கவும் தயார் எனக் கூறினார். மேலும், இளைஞர்களின் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த சிஜேபியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, ஜெ.பி. நட்டாவுக்கு அரசியல் பிடிக்கவில்லை என்றால் அவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு போகட்டும். அரசியலில் இருந்துகொண்டு அரசியல் செய்யக் கூடாது என்கிறார். பாஜக எதைச் செய்தாலும் எதிர்ப்பதுதான் எதிர்க்கட்சிகளுக்கு தேவையானது. அவர்கள் அரசியல்வாதிகள். பாஜக என்ன செய்தாலும் அவர்கள் திருப்தியடைய மாட்டார்கள். அரசு பேச்சுவார்த்தை நடத்த ஜந்தர் மந்தருக்கு வர வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

Summary

Does J.P. Nadda not like politics Let him resign cockroach janata party Abhijeet Dipke

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.