டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!

ஒடிசாவில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி பற்றி...

News image

சிறப்புத் தீவிர திருத்தம் - சித்திரிப்பு படம்

Updated On :5 ஜூலை 2026, 5:53 pm IST

ஒடிசாவில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன.

ஒடிசாவில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி வரைவுப் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. இதில், 20 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

மே 20 அன்று இதற்கு முந்தைய பட்டியலில் 3.3 கோடி வாக்காளர்கள் இருந்ததாகவும், மே 30 முதல் ஜூன் 28 வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தற்போது வாக்காளர் எண்ணிக்கை 3.13 கோடி ஆக குறைந்துள்ளதாகவும் ஒடிசா தலைமைத் தேர்தல் அதிகாரி ஆர்.எஸ். கோபாலன் கூறினார். இதில், 1.60 கோடி ஆண்கள், 1.53 கோடி பெண்கள் மற்றும் 2,775 மூன்றாம் பாலின வாக்காளர்கள் அடங்குவர்.

பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 20 லட்சத்திற்கும் மேற்பட்டோரில், 8.32 லட்சம் பேர் இறந்தவர்கள், 10.07 லட்சம் பேர் வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்தவர்கள் அல்லது கணக்கெடுப்பின்போது வராதவர்கள், 1.58 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது.

இந்தக் கணக்கெடுப்பில் சுமார் 14,000 வாக்காளர்கள் தங்களது கணக்கெடுப்புப் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திருப்பித் தரவில்லை.

தலைமைத் தேர்தல் அதிகாரி ஆர்.எஸ். கோபாலன் கூறுகையில் "வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத வாக்காளர்கள், தங்களது கோரிக்கை அல்லது ஆட்சேபனையை வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாகவோ, மொபைல் செயலி மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்படும்.

ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 4 வரை வரைவுப் பட்டியல் தொடர்பான கோரிக்கைகள், ஆட்சேபனைகள் ஏற்றுக்கொள்ளப்படும். பின்னர், 147 தேர்தல் பதிவு அலுவலர்கள் மற்றும் 994 உதவி தேர்தல் பதிவு அலுவலர்கள் செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஆய்வு செய்வார்கள்" என்று தெரிவித்தார்.

Summary

Special Intensive Revision Drive: 20 lakh people removed in Odisha

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.