திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மறுசீரமைப்புக் குழு ஆலோசனை!அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்விகளைகட்டப்போகும் முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி!எம்பயர் ஸ்டேட் உச்சியில் காதல் ப்ரபோசல்! ஜோடியாகக் கைது!!3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை!
/

பெங்களூர் கல்குவாரியில் பாறை சரிந்தது: 8 பிகார் தொழிலாளர்கள் பலி!

பெங்களூர் கல் குவாரியில் ராட்சத கிரானைட் பாறை சரிந்து விழுந்தது பற்றி..

News image

பெங்களூர் கல்குவாரி - X

Updated On :2 ஜூலை 2026, 1:41 pm IST

பெங்களூர் தெற்கில் உள்ள கல் குவாரியில் ராட்சத கிரானைட் பாறை சரிந்து விழுந்ததில், பிகாரைச் சேர்ந்த எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையின் தகவலின்படி,

பெங்களூரு தெற்கு தாலுகா எல்லையில் அமைந்துள்ள மடப்பட்டனா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கல்குவாரியில் இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

புதிய கிரஷர் இயந்திரம் அமைப்பதற்காக, தொழிலாளர்கள் குவாரிப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமான ராட்சத பாறை உருண்டு, அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்துள்ளது.

இந்த விபத்து நடைபெற்ற நேரத்தில் சுமார் 15 முதல் 20 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இதில் 8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாரும், மீட்புப் படையினரும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

மேலும், இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா எனத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

Summary

Eight workers mostly from Bihar were killed after a massive granite rock collapsed at a stone quarry in Bengaluru South Taluk on Thursday, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.