பெங்களூரில், தனியார் பெரு நிறுவனத்தின் ஊழியர்களுக்காக இயக்கப்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்தில், முன்பக்க திறப்புகொண்ட வாஷிங்மெஷினில் குழந்தைகளை வைத்தும், கழிப்பறைக்குள் பூட்டிவைத்தும் கொடுமைப்படுத்தியிருக்கும் காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பெரு நிறுவன வளாகத்துக்குள் இயங்கி வந்த இந்த குழந்தைகள் காப்பகத்துக்குள், அழும் குழந்தைகளை துன்புறுத்தும் விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், காப்பகத்தை மூடி பெங்களூர் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
குழந்தைகள் காப்பகத்தில் பணியாற்றி வந்த (?) ஐந்து பெண்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் வெளியான விடியோக்களில், முன்பக்கமாக திறக்கும் வாஷிங்மெஷினுக்குள் குழந்தைகளை உட்கார வைப்பது, கழிப்பறைக்குள் குழந்தைகளை விட்டுவிட்டு சாத்திவிடுவது, ஜெட் ஸ்பிரே கொண்டு குழந்தைகளின் வாயில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது போன்றவற்றை செய்திருக்கிறார்கள்.
சுட்டித்தனம் செய்யும் குழந்தைகளுக்கு தண்டனையாக அவர்கள் கழிப்பறைக்குள் பூட்டப்பட்டுள்ளனர். குழந்தைகள் காப்பகத்துக்குள் பிள்ளைகளை விட்டுவிட்டு அவர்களது பெற்றோர் சென்றதும் கதறி அழும் பிள்ளைகளை அங்கு பணியில் இருந்த பெண்கள் இவ்வாறு பல விதங்களில் துன்புறுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரிடம் காவல்துறை குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விடியோக்களைப் பார்க்கும் பெண்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples

பெங்களூர் கல்குவாரியில் பாறை சரிந்தது: 8 பிகார் தொழிலாளர்கள் பலி!
பற்களின் ஈறுகளில் ரத்தம் கசிவது ஏன்?

வெய்யிலால் ஏற்படும் முகப்பருக்களுக்கு ஒரே தீர்வு இதுதான்!
விடியோக்கள்

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK




