அமோனியா கசிந்த ஆலை: 300 மீ சுற்றளவில் வசிப்போர் வெளியேற உத்தரவு!திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்வி
/

தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷியின் ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு!

தேனிலவு கொண்டாட அழைத்துச்சென்று கணவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட சோனாம் ரகுவன்ஷியின் ஜாமீன் மனு பற்றி..

News image

சோனம், ராஜா ரகுவன்ஷி - TNIE

Updated On :2 ஜூலை 2026, 1:07 pm IST

தேனிலவு கொண்டாட அழைத்துச்சென்று கணவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட சோனாம் ரகுவன்ஷிக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேகாலயா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வியாழனன்று இந்த வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரியதைத் தொடர்ந்து, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமையன்று மாநில அரசின் மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்டது.

சோனம் ரகுவன்ஷி கைது செய்யப்பட்டபோது அதற்கான காரணங்கள் அடங்கிய ஆவணங்கள் அவருக்கு முழுமையாக வழங்கப்படாததாலேயே ஜாமீன் வழங்கப்பட்டதாக மேத்தா குறிப்பிட்டார்.

ஆவணங்கள் வழங்கப்படாத விவகாரமானது, தட்டச்சுப் பிழை காரணமாகத் தவறாகக் குறிப்பிடப்பட்ட ஒரு சட்டப் பிரிவோடு தொடர்புடையது என்று கூறிய அவர், குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக வாய்ப்புள்ளதையும் வலியுறுத்தினார். இந்த விவகாரத்தை வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதிகள் அமர்வு ஒப்புக்கொண்டது.

சோனம் ரகுவன்ஷிக்கு ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை மேகாலயா உயர்நீதிமன்றம் ஜூன் 29 அன்று உறுதி செய்திருந்தது.

பின்னணி என்ன?

கடந்த ஆண்டு மே 23 அன்று மேகாலயாவின் சோஹ்ரா பகுதியில் சுற்றுலா சென்றிருந்தபோது அந்தத் தம்பதியினர் காணாமல் போயினர். அதன்பின்னர், ஜூன் 2 அன்று ராஜா ரகுவன்ஷியின் உடல் ஆழமான பள்ளத்தாக்கு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.

பண ஆதாயத்திற்காக கூலிப்படையினர் மூலம் தனது கணவரைத் தீர்த்துக்கட்ட சோனம் ரகுவன்ஷி சதி செய்ததாக காவல்துறை குற்றம் சாட்டியதையடுத்து, சோனம் ரகுவன்ஷி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

The Meghalaya government on Thursday moved Supreme Court challenging the bail granted to Sonam Raghuvanshi, accused of murdering her husband Raja Raghuvanshi in 2025 during their honeymoon in the state.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.