முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

காங்கிரஸின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது: டிஆர்எஸ் தலைவர் கவிதா!

டிஆர்எஸ் கட்சியின் தலைவர் கவிதா தெரிவித்தது பற்றி..

News image

டிஆர்எஸ் தலைவர் கவிதா - X

Updated On :2 ஜூலை 2026, 5:09 pm IST

காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதாக ராஷ்டிர சேனா (டிஆர்எஸ்) கட்சியின் தலைவர் கவிதா தெரிவித்துள்ளார்.

தெலங்கானா தனி மாநிலம் கோரிய போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களுக்கு 250 சதுர அடி வீட்டு மனைகள் வழங்கப்படும் எனக் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, உப்பல் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட போடுப்பல் பகுதியில் கவிதா தலைமையில் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், போராட்டம் நடைபெறவிருந்த பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்திற்கு வரவிடாமல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இருப்பினும் தடையை மீறி முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக கவிதா போராட்டத்தைத் தொடங்க முயன்றார்.

தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்காகப் போராடியவர்களுக்கு வழங்க அரசு நிலத்தைக் கைப்பற்ற முயன்ற கவிதா போடுப்பல் பகுதிக்கு வந்து , அங்கு அரசு நிலப்பகுதியைத் தன்வசப்படுத்திக்கொள்ளும் முயற்சியாகப் பூஜை ஒன்றையும் மேற்கொண்டார்.

இதனிடையே போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கவிதா அவரது ஆதரவாளர்களை போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைது செய்து குண்டுக்கட்டாக பொல்லாரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிகழ்வின்போது பேசிய கவிதா,

காவல் துறையினர் பெண்கள் மற்றும் பிறர் மீது தடியடி நடத்தியதாகக் குற்றம் சாட்டினார்.

தெலங்கானா தனி மாநிலத்திற்காகப் போராடியவர்களின் குடும்பங்களுக்கு 250 சதுர அடி நிலம் வழங்கப்படும் என்று ஆளும் காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற டிஆர்எஸ் வலியுறுத்தியதாக அவர் கூறினார்.

காங்கிரஸ் அரசின் வீழ்ச்சிக்கான "காலக்கெடு" தொடங்கிவிட்டதாகக் கூறிய அவர், தெலங்கானா மாநிலக் கோரிக்கைக்காகப் போராடிய செயல்பாட்டாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தங்கள் கட்சி தொடர்ந்து போராடும் என்றும் தெரிவித்தார்.

கவிதாவைக் காவல் துறையினர் கைது செய்ததைக் கண்டித்து, பொல்லாரம் காவல் நிலையத்தில் டிஆர்எஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

தெலங்கானா தனி மாநிலத்திற்காகப் போராடியவர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதற்காக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. கேசவ ராவ் மற்றும் பிறர் அடங்கிய குழு ஒன்றை காங்கிரஸ் அரசு அமைத்துள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தைப் பிரித்து, ஜூன் 2, 2014 அன்று தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.