/

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் துவங்கியது!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் துவங்கியது...

News image
சபரிமலை ஐயப்பன் கோயில் (கோப்புப்படம்)
Updated On :14 ஜனவரி 2026, 1:03 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சபரிமலையில் மகரஜோதி பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் இன்று (ஜன. 14) மாலை துவங்கியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக, கடந்த டிச.30 அன்று நடை திறக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்ட நிலையில் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் இன்று மாலை துவங்கியுள்ளது.

இந்த நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் மகரஜோதி தரிசனத்தில் பங்கேற்க லட்சக்கணக்கான ஐயப்பன் பக்தர்கள் சபரிமலைக் கோயிலில் திரண்டுள்ளனர்.

ஐயப்பனின் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு கருவறையில் தீபாராதனை நடைபெறவுள்ளன. பின்னர், கோயில் வளாகத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள பொன்னம்பலமேடு மலை உச்சியின் மீது தெய்வீக ஒளியாகக் கருதப்படும் மகரஜோதியை இன்னும் சில நிமிடங்களில் பக்தர்கள் தரிசிக்க உள்ளனர்.

summary

The Makaravilakku darshan at the Sabarimala Ayyappan temple has commenced this evening (Jan. 16).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.