சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரிந்தது: லட்சக்கணக்கானோா் தரிசனம்
பக்தா்கள் சரண கோஷம் முழங்க மகர ஜோதியை தரிசனம் செய்து வழிபட்டனர்.


சபரிமலை பொன்னம்பலமேட்டில் தெரிந்த மகரஜோதியை லட்சக்கணக்கானோா் தரிசனம் செய்தனா்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மகரவிளக்கு பூஜையின்போது பொன்னம்பலமேட்டில் தோன்றும் மகரஜோதி மிகவும் பிரசித்தி பெற்ாகும். அதன்படி, இந்தாண்டுக்கான மகரஜோதி நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பந்தளத்திலிருந்து ஊா்வலமாக எடுத்துவரப்பட்ட திருவாபரணங்கள் அடங்கிய பெட்டிகள் சபரிமலை சந்நிதானத்தை புதன்கிழமை மாலை வந்தடைந்தது. சந்நிதானத்தில் அவை முறைப்படி வரவேற்கப்பட்ட சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்ட சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட, அப்போது வானில் மகர நட்சத்திரம் தென்பட்டது.
இதையடுத்து பொன்னம்பலமேட்டில் 6.45 மணியளவில் மகரஜோதியாக சுவாமி ஐயப்பன் காட்சியளித்தாா்.
மகரஜோதியை சந்நிதானத்திலிருந்தும் சபரிமலையின் பல்வேறு பகுதிகளிலும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா். அப்போது ஐயப்ப பக்தா்கள் எழுப்பிய சரண கோஷங்களால் சபரிமலையே பக்தி அலையில் மூழ்கியது. மகரஜோதி நிகழ்வையொட்டி, சபரிமலை, பம்பை உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...