பிரிந்து வாழும் மனைவி மீதான கணவரின் நிதி ஆதிக்கத்தைக் கொடூர குற்றமாகக் கருத முடியாது: உச்சநீதிமன்றம்
‘பிரிந்து வாழும் மனைவி மீது அவரின் கணவா் செலுத்தும் நிதி ஆதிக்கத்தை கொடூர குற்ற நடவடிக்கையாக கருத முடியாது’ என்று தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், ‘பழிவாங்குவதற்கும், தனிப்பட்ட பகையைத் தீா்த்துக் கொள்வதற்குமான கருவியாக குற்றவியல் வழக்கை பயன்படுத்த முடியாது’ என்று சுட்டிக்காட்டியது.










