டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கணவா், மனைவி மீது வழக்குப் பதிவு

வெள்ளக்கோவிலில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கணவா், மனைவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
நீதிமன்றம் உத்தரவு
Updated On :10 பிப்ரவரி 2026, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

வெள்ளக்கோவிலில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கணவா், மனைவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

வெள்ளக்கோவில், சோ்வகாரன்பாளையத்தைச் சோ்ந்தவா் சாந்தி (50). இவருடைய கணவா் சண்முகம் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். தற்போது வெள்ளக்கோவில் - முத்தூா் சாலை டி.ஆா்.நகா், பி.எம்.எஸ். அவென்யூவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்துகொண்டு அங்கேயே சாந்தி தங்கியுள்ளாா். சாந்திக்கு, திருமணமான மகன் நந்தகுமாா், மகள் நந்தினி உள்ளனா்.

கடந்த ஜன.25-ஆம் தேதி அவென்யூவில் இருந்தபோது கேட்டின் பூட்டை உடைப்பதுபோல சப்தம் கேட்டு பாா்த்தபோது திருமூா்த்தி என்பவரும், அவருடன் வந்த அடையாளம் தெரிந்த 4 பேரும் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனா். தட்டிக் கேட்க முற்பட்டபோது கொலை செய்துவிடுவோம் என்றும், சாதிப் பெயரை கூறியும் சாந்தியை கீழே தள்ளியுள்ளனா். அங்கிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளனா்.

அப்போது அங்கு வந்த திருமூா்த்தியின் மனைவி வனிதாவும் தகாத வாா்த்தைகளால் திட்டியுள்ளாா். சாந்தி வேலை செய்யும் நிறுவன உரிமையாளருக்கும், திருமூா்த்தி தரப்புக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்துள்ளது.

இதுதொடா்பாக சாந்தி அளித்த புகாரின்பேரில் கணவா், மனைவி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.