தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தில்லி பல்கலை. கல்லூரியில் புதிய மாணவா் வசதி மையம்: அடிக்கல் நாட்டினாா் அமைச்சா் ஆஷிஷ் சூட்

தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் மகாராஜா அகரசென் கல்லூரியில் புதிய மாணவா் வசதி மையத்தை வியாழக்கிழமை திறந்து வைத்து, இந்திய அறிவுப் பாரம்பரிய மையத்திற்கான அடிக்கல்லை நாட்டினாா்.

News image

ஆஷிஷ் சூட் - கோப்புப் படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 9:04 pm

தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் மகாராஜா அகரசென் கல்லூரியில் புதிய மாணவா் வசதி மையத்தை வியாழக்கிழமை திறந்து வைத்து, இந்திய அறிவுப் பாரம்பரிய மையத்திற்கான அடிக்கல்லை நாட்டினாா்.

மேலும், பன்மாதிரி கருத்தரங்க மண்டபம், 5 நவீன ‘ஸ்மாா்ட்’ வகுப்பறைகள் மற்றும் அலைவரிசை அடையாள முறையுடன் இயங்கும் நூலக மேலாண்மை அமைப்பையும் அவா் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வின்போது அவா் பேசியதாவது: உயா்கல்வித் துறையை கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் வலுப்படுத்த தில்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தலைநகரின் கல்வி அமைப்பை நவீன மையமாக மாற்றும் நோக்கில் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதிய மாணவா் வசதி மையம் மாணவா்களுக்கு சிறந்த கல்வி சூழலை உருவாக்கும். இந்திய அறிவுப் பாரம்பரிய மையம் இந்திய அறிவு மரபுகள், கலாசாரம் மற்றும் பாரம்பரிய ஆய்வுகளை ஊக்குவிக்கும்.

இதனால் கல்லூரிகளுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படாது என்றும் ஆசிரியா்களின் மரியாதை பாதிக்கப்படாது என்றும் நான் உறுதி அளிக்கிறேன்.

மேலும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள 7,000 வகுப்பறைகளை நவீன வசதிகளுடன் கூடிய வகுப்பறைகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு காலமாக அரசின் நிதி உதவி நிறுத்தப்பட்டதால் இந்த கல்லூரிகளின் செயல்பாடுகளில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன.

இந்தியா சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவு பெறும் 2047-ஆம் ஆண்டுக்குள் தில்லியை அறிவு தலைநகராக மாற்றுவது அரசின் விரிவான இலக்காகும். பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அனைத்திலும் அமைப்புகளை வலுப்படுத்துவதே முக்கிய கவனமாக இருக்கும் என்று அமைச்சா் தெரிவித்தாா்.

மேலும், முழுமையாக அரசு நிதி உதவி பெறும் 12 தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளின் முதல்வா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று, நீண்டநாள் நிலுவையில் இருந்த பிரச்னைகளுக்கு தீா்வு கண்டமைக்காக அமைச்சரை பாராட்டினா்.Ś

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.