தெற்கு மும்பையில் கிழக்கு-மேற்கு இணைப்பு மேம்பாலத்தை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார்.
மத்திய மும்பையில் 130 ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் கால பாலம் ஆபத்தானது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த பாலம் முழுமையாக அகற்றப்பட்டது.
இந்த நிலையில், புதிய மேம்பாலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த கிழக்கு-மேற்கு இணைப்பை மீட்டெடுக்கும். ஜஹாங்கிர் போமன் பெஹ்ராம் சாலை, டாக்டர் தாதாசாகேப் பத்காம்கர் மார்க் (கிராண்ட் சாலை), பதே பாபுராவ் மார்க், மகாலட்சுமி நிலைய பாலம் ஆகியவற்றில் நெரிசலைக் குறைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது திறக்கப்பட்ட மேம்பாலத்தின் மொத்த நீளம் 333 மீட்டர். இதில் கிழக்குப் பகுதியில் 138.39 மீட்டர், மேற்குப் பகுதியில் 157.39 மீட்டர் மற்றும் ரயில்வே எல்லைக்குள் 36.90 மீட்டர் ஆகியவை அடங்கும்.
இந்த மேம்பாலமானது டார்டியோ, நாக்பாடா மற்றும் மும்பை மத்திய ரயில் நிலையத்தை இணைக்கிறது.
பிருஹன்மும்பை நகராட்சி (பிஎம்சி) மும்பை மத்திய ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள மேம்பாலத்தை 15 மாதங்கள் மற்றும் ஆறு நாள்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. டெண்டர் நிபந்தனைகளின்படி, நிர்ணயிக்கப்பட்ட நிறைவு காலக்கெடுவிற்கு நான்கு மாதங்கள் முன்னதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
பாலம் திறப்பு விழாவில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Summary
Maharashtra Chief Minister Devendra Fadnavis on Thursday virtually inaugurated the Tardeo-Nagpada-Mumbai Central flyover, a key east-west connecting link in south Mumbai that offers commuters a smoother alternative route.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேதுபாவாசத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் உள்வாங்கியது: போக்குவரத்து நிறுத்தம்

மத்திய கிழக்கு போா் பதற்றம்: ஐபிஓ வெளியிடுவதற்கான காலக்கெடுவை நீட்டித்தது செபி!

புதுச்சேரியில் திமுக தலைமையில் கூட்டணி: முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தல்

மார்ச் 17 - 22 திமுக வேட்பாளர்கள் நேர்காணல்! தொகுதி விவரங்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



