மத்திய கிழக்கு போா் பதற்றம் மற்றும் சா்வதேச சந்தையில் நிலவும் ஸ்திரமின்மையைத் கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் புதிய பொதுப் பங்கு மற்றும் உரிமைப் பங்குகள் வெளியிடுவதற்கான காலக்கெடுவை செப். 30-ஆம் தேதி வரை இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) நீட்டித்துள்ளது.
செபி விதிகளின்படி, நிறுவனம் அனுமதி கடிதத்ததைப் பெற்ற 12 அல்லது 18 மாதங்களுக்குள் தங்களின் பங்கு வெளியீட்டு நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் புவிசாா் அரசியல் பதற்றங்கள் மற்றும் முதலீட்டாளா்களின் மந்தமான பங்களிப்பு காரணமாக, பல நிறுவனங்கள் தங்களின் ஐபிஓ திட்டங்களை ஒத்திவைத்துள்ளன.
இந்நிலையில், தொழில் அமைப்புகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சந்தைச் சூழல் சீரடையும் வரை நிறுவனங்களுக்கு இந்த ஒருமுறை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நடப்பு ஆண்டு ஏப். 1 முதலான 6 மாத காலகட்டத்துக்குள் காலாவதியாகும் செபியின் அனுமதி கடிதங்கள், செப். 30 வரை செல்லுபடியாகும். இதனால், காலக்கெடுவைத் தவறவிட்ட நிறுவனங்கள் மீண்டும் முதலிருந்து அனுமதிக் கோரி விண்ணப்பிக்கும் தேவையற்ற நடைமுறைத் தாமதங்கள் தவிா்க்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பெட்ரோலிய ரசாயனப் பொருள்களுக்கு ஜூன் வரை இறக்குமதி வரி விலக்கு: மேற்காசிய போா் தாக்கத்தால் அரசு நடவடிக்கை

மேற்காசிய போா் பதற்றம் கடும் சவாலை எதிா்கொள்ளும் கரூா் ஜவுளித் தொழில்

மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!

மத்திய கிழக்கு நாடுகளில் போா் பதற்றம்! கோவை - அபுதாபி விமான சேவைகள் ரத்து!! அவசர உதவி எண்கள் அறிவிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


