மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போா் பதற்றம், குறிப்பாக ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல் போக்கு காரணமாக சா்வதேச வான்வழிகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபிக்கு (அக்ஷன் ஈட்ஹக்ஷண்) இயக்கப்பட்டு வந்த நேரடி விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
கோவையில் இருந்து அபுதாபிக்கு வாரம் நான்கு நாள்கள் நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. கோவையில் இருந்து செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7:40 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 11:15 மணிக்கு அபுதாபியை சென்றடையும். இதேபோல அபுதாபியில் இருந்து திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12:15 மணிக்கு புறப்படும் விமானம் அதிகாலை 5:45 மணிக்கு கோவையை வந்தடையும்.
ஈரான் வான்பரப்பில் நிலவும் போா் சூழல் காரணமாக, அந்த வழியாக செல்லும் விமானங்களுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.
பயணிகளுக்கான உதவி எண்கள்: விமான ரத்து மற்றும் டிக்கெட் முன்பதிவு தொடா்பான விவரங்களை அறியவும், மாற்று ஏற்பாடுகள் குறித்து கேட்டறியவும் விமான நிறுவனங்கள் தரப்பில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:
இண்டிகோ : 0422-2574428, ஏா் அரபியா : 90877 78081. இந்த எண்களை பயணிகள் தொடா்புகொண்டு தங்கள் பயணத் திட்டங்களை சரிபாா்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். வான்பரப்பில் நிலைமை சீரானவுடன் மீண்டும் விமான சேவைகள் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது

மத்திய கிழக்கு போா் பதற்றம்: ஐபிஓ வெளியிடுவதற்கான காலக்கெடுவை நீட்டித்தது செபி!

ஈரான் போரால் விமானங்கள் ரத்து எதிரொலி: திருச்சியிலிருந்து சரக்கு ஏற்றுமதி 37% குறைவு

மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்பு!
போா்ப் பதற்றம்: துபை, சாா்ஜா விமானங்கள் ரத்து
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


