இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்திய பாரம்பரிய உடையில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றுள்ளார்.
இஸ்ரேல் நாட்டுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி புதன்கிழமை சென்றார். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று மாலை உரையாற்றிய மோடிக்கு அந்நாட்டின் உயரிய பதக்கம் அளித்து கெளரவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் நெதன்யாகு தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
அப்போது மோடியை வரவேற்க இந்திய பாரம்பரிய உடை அணிந்து வந்த பெஞ்சமின் நெதன்யாகுவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மோடியை வரவேற்கும் காணொலியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நெதன்யாகு, “பாரம்பரிய இந்திய உடையை அணிந்து பிரதமர் மோடியை ஆச்சரியப்படுத்தினேன்” என்று ஹிந்தியின் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எக்ஸ் பதிவை பகிர்ந்த மோடி, “உண்மையில் அருமையாக இருக்கிறது! இந்திய உடைகள் மீதான உங்கள் அன்பு, எங்கள் நாட்டின் வளமான கலாச்சாரம் மற்றும் மரபுகள் மீதான உங்கள் மரியாதையைப் பிரதிபலிக்கிறது” என்று பதிலளித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமருடன் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையில் இன்று ஈடுபடவுள்ளார். அறிவியல் தொழில்நுட்பம், புத்தாக்க நடவடிக்கைகள், ராணுவம், தேசப் பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 9 ஆண்டுகளில் பிரதமா் மோடி இஸ்ரேலுக்குப் பயணிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு கடந்த 2017 ஜூலையில் அவா் இஸ்ரேல் சென்றாா். அதன் பிறகு இரு நாடுகள் இடையே பல்வேறு நிலைகளில் ஒத்துழைப்பு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Israeli Prime Minister welcomes Modi in Indian attire!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி

நாகர்கோவில் வந்தார் பிரதமர் மோடி!

தான் பலவீனமான பிரதமர் என்பதை மோடி ஒப்புக்கொள்வாரா? மு.க. ஸ்டாலின் கேள்வி

பிரதமர் மோடி வருகை: மீனம்பாக்கம், கிண்டியில் டிரோன்களுக்குத் தடை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



