இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாட்டின் உயரிய விருதைப் பெற்ற ஒரே தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
இஸ்ரேல் நாட்டுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக புதன்கிழமை சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றினார்.
இந்தச் சொற்பொழிவின் மூலம், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமா் என்ற பெருமையை மோடி பெற்றாா். அவருக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மிக உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தலைவா் அமீா் ஒஹானா மோடிக்குப் பதக்கத்தை அணிவித்தாா். இந்தியா-இஸ்ரேல் இடையிலான உத்திசாா்ந்த உறவை வலுப்படுத்த பிரதமா் மோடி அளித்த மிகச் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்தப் பதக்கம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி தெரிவித்திருப்பதாவது:
”நெசெட் (இஸ்ரேல் நாடாளுமன்றம்) பதக்கத்தைப் பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த பதக்கத்தை பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்.
இந்த மரியாதை ஒரு தனிநபருக்கு அளிக்கப்படும் மரியாதை அல்ல, மாறாக இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நீடித்த நட்புக்கு அளிக்கப்படும் மரியாதை.
இது நமது இரு நாடுகளையும் வழிநடத்தும் பகிரப்பட்ட மரியாதையை பிரதிபலிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதல் தலைவர்
இஸ்ரேல் நாடாளுமன்ற பதக்கத்தைப் பெற்ற முதல் உலகத் தலைவர் பிரதமர் மோடி ஆவார்.
மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டு பாலஸ்தீனம் சென்ற மோடிக்கு அந்நாட்டின் உயரிய ‘கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன்’ விருது வழங்கப்பட்டது.
இதன்மூலம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளின் உயரிய விருதைப் பெற்ற முதல் உலகத் தலைவர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது.
Summary
Modi is the only leader to receive the highest award from Israel and Palestine!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராகுலுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!
ஈரான் உளவுத்துறை தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்... வாய் திறக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


