தமிழ்நாடு - புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மார்ச் 17 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை திமுக வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
''தமிழ்நாடு - புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு போட்டியிட விரும்பி தலைமைக்கு விண்ணப்பம் செலுத்தியவர்களை 17-03-2026 முதல் 22-03-2026ஆம் தேதி வரை, பின்வரும் மாவட்ட வாரியாக சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம் -வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து தலைவர் மு.க. ஸ்டாலின் அறிந்திட இருக்கிறார்கள்.
குறிப்பிட்டுள்ள தேதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர் மட்டும் வரவேண்டும். மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பகுதிக் கழகச் செயலாளர்கள் வரவேண்டிய அவசியமில்லை.
வேட்பாளர்கள் தங்களுக்கான ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களையும் -'அவர்களுக்காக விருப்ப மனு' செலுத்தியோரையும் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி முதல் நாளான மார்ச் 17 ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட செயலாளர்களுக்கு நேர்காணல் நடைபெறவுள்ளது.
மார்ச் 18 ஆம் தேதி காலை 9 மணிக்கு, தூத்துக்குடி தெற்கு, தூத்துக்குடி வடக்கு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய, திருநெல்வேலி மேற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு
மார்ச் 18 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு, தேனி வடக்கு, தேனி தெற்கு, விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு, இராமநாதபுரம், சிவகங்கை தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறவுள்ளது.
மார்ச் 19 ஆம் தேதி காலை 9 மணிக்கு கரூர், நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, ஈரோடு மத்திய, கோவை வடக்கு, கோவை மாநகர், கோவை தெற்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் மத்திய, நீலகிரி
மாலை 4 மணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, திருப்பூர் கிழக்கு, திருப்பூர் தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு
மார்ச் 20 ஆம் தேதி காலை 9 மணி இராணிப்பேட்டை, வேலூர் வடக்கு, வேலூர் தெற்கு, திருப்பத்தூர், திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு,
மாலை 4 மணிக்கு தர்மபுரி கிழக்கு, தர்மபுரி மேற்கு, சேலம் மத்திய, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு.
மார்ச் 21 காலை 9 மணிக்கு திருச்சி வடக்கு, திருச்சி மத்திய, திருச்சி தெற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய, பெரம்பலூர், அரியலூர்
மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவாரூர்
மார்ச் 22 காலை 9 மணிக்கு கடலூர் கிழக்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மத்திய, விழுப்புரம் தெற்கு, காஞ்சிபுரம் தெற்கு.
மாலை 4 மணிக்கு திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, சென்னை வடக்கு சென்னை வடகிழக்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு, சென்னை கிழக்கு தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறவுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
TN Election 2026 March 17 - 22, DMK candidates interview! Constituency details
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

234 தொகுதிகளுக்கான தவெக வேட்பாளர்கள்! - முழுவிவரம்

புதுச்சேரியில் திமுக தலைமையில் கூட்டணி: முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தல்
மேற்கு வங்கத்திற்கு ஏப். 23 , 29-ல் வாக்குப்பதிவு!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து: மார்ச் 13 வரை நீட்டிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



