தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மேற்கு வங்கத்திற்கு ஏப். 23 , 29-ல் வாக்குப்பதிவு!

மேற்கு வங்கத்திற்கு இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிப்பு...

News image

ஞானேஷ் குமார் - யூடியூப் / Election Commission of India

Updated On :15 மார்ச் 2026, 11:06 am

மேற்கு வங்கத்திற்கு இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று (மார்ச் 15) அறிவித்தார்.

இதன்படி, மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 29ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

முதல் கட்டத் தேர்தல்

  • வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30

  • வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் ஏப்ரல் 6

  • வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 7

  • வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் ஏப்ரல் 9

  • வாக்குப் பதிவு ஏப்ரல் 23

  • வாக்கு எண்ணிக்கை மே 4

இரண்டாம் கட்டத் தேர்தல்

  • வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 2

  • வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் ஏப்ரல் 9

  • வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 10

  • வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் ஏப்ரல் 13

  • வாக்குப் பதிவு ஏப்ரல் 29

  • வாக்கு எண்ணிக்கை மே 4

அஸ்ஸாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் மார்ச் 16-ஆம் தேதி தொடங்குகிறது.

வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி மார்ச் 23.

வேட்புமனுக்கள் பரிசீலனை மார்ச் 24-ஆம் தேதி நடைபெறும்.

வேட்புமனுவை திரும்பப் பெற கடைசித் தேதி மார்ச் 26.

தேர்தல் நடைமுறைகள் மே 6-க்கு முன் முடிவுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

West Bengal to vote in two phases on Apr. 23 and 29 Election Commission of India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.