மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேரம் என்ன? அரசாணை வெளியீடு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேரம் பற்றி...

News image

கோப்புப்படம் - DNS

Updated On :30 மார்ச் 2026, 5:21 am

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கும் என்று திங்கள்கிழமை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இன்று முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனுவைத் திரும்பப் பெற ஏப்ரல் 9 கடைசி நாளாகும்.

இந்த நிலையில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, கேரளம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறும்.

Summary

Tamil Nadu Assembly Election Voting Hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.