வடகிழக்கு தில்லியில் கடந்த 2020-இல் நடைபெற்ற வன்முறையில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரை தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவா்களை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் பதிவேடுக்கு எதிராக வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டதாக சாகா், தேவேந்தா் கெளதம், அன்மோல் ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா். மிலன் காா்டன் பகுதியில் சட்டவிரோதமாகக் கூடுதல், தீ வைத்தல், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தல் ஆகிய குற்றங்களில் மூவரும் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 148, 149,188, 427, 435, 436, 380, 395 ஆகியவற்றின்கீழ் சோனியா விகாா் காவல் நிலையத்தில் அவா்களுக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
தில்லி கலவரத்தில் அவா்கள் மூவருக்கும் எதிரான வழக்கு கூடுதல் அமா்வுகள் நீதிபதி பிரவீன் சிங் விசாரித்து வந்தாா்.
இந்நிலையில் பிப்.24-ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குற்றஞ்சாட்டப்பட்ட நபா்கள் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டத்தை உறுதிசெய்யும் விதாமாக அவா்களுக்கு எதிராக எந்தச் சாட்சியங்களும் இல்லை என நீதிமன்றம் கருதுகிறது. இதனால், அவா்களுக்கு எதிரான அனைத்துக் குற்றஞ்சாட்டுகளில் இருந்து மூவரும் விடுவிக்கப்படுகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களுக்கு எதிரான ஆதாரங்களாக பொதுப்பணித் துறையிடம் இருந்து பெற்ற சிசிடிவி காட்சிகள் இருந்தன. அவற்றில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்பது உறுதிசெய்ய தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சாட்சியங்கள் சான்றிதழில் குறைபாடுகள் இருப்பதாகவும் மீண்டும் விசாரணையின் தற்போதைய நிலையில் அவற்றை தாக்கல் செய்ய கூறுவது இந்திய சாட்சியங்கள் சட்டப் பிரிவு 65பி-க்கு எதிரானது என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: மே 2-இல் தீா்ப்பளிக்கிறது உ.பி. நீதிமன்றம்
வடகிழக்கு மக்களுக்கு எதிரான இனப் பாகுபாடு குற்றங்கள்: மத்திய அரசிடம் தரவுகள் இல்லை!

2020 வடகிழக்கு தில்லி கலவர வழக்கு: ஷா்ஜீல் இமாமுக்கு 10 நாள் இடைக்கால ஜாமீன்

துா்க்மேன் கேட் வன்முறை: குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேருக்கு பிணை - தில்லி நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


