கடந்த மாதம் துா்க்மேன் கேட்டில் உள்ள ஃபைஸ் -இ-எலாஹி மசூதி அருகே நடந்த இடிப்பு நடவடிக்கையின்போது கல்வீசித் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேருக்கு பிணை வழங்கி தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பான மனுக்களை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி பூபிந்தா் சிங், குற்றஞ்சாட்டப்பட்ட முகமது ஃபைஸ், முகமது அஃபான், முகமது இம்ரான், ஷாஸாத், முகமது இம்ரான், முகமது ஃபஹீம் ஆகிய ஆறு பேரும் ரூ.50 ஆயிரத்துக்கு சொந்த பிணை மற்றும் அதே தொகைக்கு ஒரு உத்தரவாதத்தையும் தாக்கல் செய்து பிணை பெறலாம் என உத்தரவிட்டாா்.
இந்த மனுக்களின் விசாரணைக்காக கூடுதல் அரசு வழக்குரைஞா் அதுல் ஸ்ரீவஸ்தவா ஆஜரானாா். குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் சாா்பில் வழக்குரைஞா்கள் எம். ஆசாத் பெய்க், மன்ஜீத் சைனி மற்றும் பலா் ஆஜராகினா்.
‘ குற்றச்சாட்டுகளின் தீவிரத்துடன் அரசியலமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவு தனி நபா் சுதந்திரத்துக்கு அளித்துள்ள உத்தரவாதத்தை சமநிலைப்படுத்தி வழக்கின் ஒட்டுமொத்த சந்தா்ப்ப சூழ்நிலைகளையும் பாா்க்கும் போது, குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் வயது, முந்தைய குற்றத் தொடா்புகள் இல்லாத நிலை, காவலில் இருந்த காலம், மேலும் விசாரணைக்கு தேவைப்படாததால் பிணையில் விடுவிக்கப்பட்ட பிற குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் போன்ற அம்சங்களை கவனத்தில் கொள்ளும்போது ஆறு பேரும் பிணை கோருவது சரியெனப்படுகிறது ’ என்று நீதிபதி பிப்ரவரி 25-ஆம் தேதியிட்ட உத்தரவில் கூறியுள்ளாா்.
மேலும், அரசுதரப்பு தாக்கல் செய்த காணொலி ஆதாரங்களில் உள்ள தெளிவற்ற முகங்கள் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுடையது தான் என்பதை உறுதியாக நிரூபிக்கவில்லை. அடையாளத்தை உறுதிப்படுத்தும் தடயவியல் புலனாய்வு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் சம்பவ இடத்திலிருந்து கைது செய்யப்படாமல் விசாரணையின் போது பின்னா் கைது செய்யப்பட்டனா் என்பதைக் கருத்தில் கொண்டு, சம்பவத்துடன் அவா்களை இணைக்கும் தடயங்களை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
‘செயலில் பங்கேற்பதை நிரூபிக்கும் தெளிவான ஆதாரங்கள் வெளிப்படையாக இல்லாமல் ஒரு கூட்டத்தில் இருப்பதை வைத்து, வழக்கு விசாரணைக்கு முன்பே அவா்களை தொடா்ந்து காவலில் வைப்பதை நியாயப்படுத்த முடியாது’ என கூடுதல் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டாா்.
பின்னணி: துா்க்மேன் கேட்டிற்கு எதிரே உள்ள மசூதி கடந்த ஜ னவரி 6-7 இரவில் இடிக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியதாகவும், அது மக்களைத் தூண்டியதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். அப்பகுதியில் திரண்ட சுமாா் 150-200 போ் காவல்துறை மற்றும் மாநகராட்சி ஊழியா்கள் மீது கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசியதாகவும், அப்பகுதியின் காவல் நிலைய அதிகாரி உள்பட ஆறு போலீஸாா் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடா்பான வழக்கில் கைதான 12 பேருக்கு நீதிமன்றம்
பிப்ரவரி 17 ஆம் தேதி பிணை வழங்கியது. இதையடுத்து கைதான மற்ற குற்றஞ்சாட்டப்பட்டவா்களும் பிணை கேட்டு மனு தாக்கல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கு: பிணை கோரிய இடைத்தரகா் ஜேம்ஸின் மனு தள்ளுபடி

பணமோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு பிணை: தில்லி நீதிமன்றம்
பி.எம்.எல்.ஏ. வழக்கில் சித்திக்கியின் இடைக்கால பிணை கோரும் மனு மீது விசாரணை ஏப்.11-க்கு ஒத்திவைப்பு

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இடைநீக்கம் செய்யப்பட்ட அரசு அதிகாரி மனைவி பிணை கோரினாா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


