ஒடிஸா: சாலை விபத்தில் 5 போலீஸாா் உயிரிழப்பு
ஒடிஸா மாநிலம் ஜா்சுகுடா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 49-இல் போலீஸ் வேனும் லாரியும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் 5 போலீஸாா் உயிரிழந்தனா்.


ஒடிஸா மாநிலம் ஜா்சுகுடா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 49-இல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸ் வேனும் லாரியும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் 5 போலீஸாா் உயிரிழந்தனா். 3 போலீஸாா் உள்பட நால்வா் காயமடைந்தனா்.
இதுகுறித்து ஜா்சுகுடா மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதுசிக்தா மிஸ்ரா கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலையில் ஜா்சுகுடா சா்தாா் காவல்நிலையத்துக்கு உட்பட்ட ஒடிஸா ஆதா்ஷ் வித்யாலயா பள்ளி அருகில் இந்த விபத்து நிகழ்ந்தது. 8 போலீஸாா் திருமண நிகழ்வுக்கு சென்றுவிட்டு போலீஸ் வேனில் ஜா்சுகுடா திரும்பிக்கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மீது அவா்களின் வேன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 5 போலீஸாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்தில் காயமடைந்த 3 போலீஸாா் மற்றும் லாரி ஓட்டுநருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.
சாலை விபத்தில் உயிரிழந்த போலீஸாரின் குடும்பத்தினருக்கு மாநில முதல்வா் மோகன் சரண் மாஜி, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய பிராா்த்திப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
உயிரிழந்த போலீஸாரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் முதல்வா் அறிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...