நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

தில்லி: வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்து 13 பேர் காயம்

வடமேற்கு தில்லில் வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் போலீஸார் உட்பட 13 பேர் காயமடைந்தனர்.

News image
தீயணைப்பு வாகனம். - கோப்புப்படம்.
Updated On :22 பிப்ரவரி 2026, 8:48 am

இணையதளச் செய்திப் பிரிவு

வடமேற்கு தில்லில் வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் போலீஸார் உட்பட 13 பேர் காயமடைந்தனர்.

வடமேற்கு தில்லியின் மஜ்லிஸ் பூங்காவில் உள்ள வீட்டில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்துக்கு விரைந்த போலீஸார், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 6 போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உட்பட 13 பேர் காயமடைந்தனர்.

அந்த நேரத்தில் கட்டடத்திலோ அல்லது அதன் அருகிலோ இருந்த பல உள்ளூர்வாசிகளும் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் ஆரம்பத்தில் பாபு ஜகஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் காயங்கள் தீவிரமாக இருந்ததால், பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

மேலும் அவர்களின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். தீயணைப்புத் துறையினரின் தொடர் முயற்சிகளுக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஸ்டில்ட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரிகள் மதிப்பிட்டு வருகின்றனர்.

தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது பார்க்கிங் பகுதியில் எல்பிஜி எரிவாயு கசிவு ஏற்பட்டதா என்பதை ஆய்வு செய்து வருவதாக போலீஸார் கூறினர்.

summary

An LPG cylinder exploded while fire and police personnel were trying to douse a house fire in northwest Delhi's Majlis Park on Sunday, leaving 13 injured, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.