டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தில்லி புறநகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ராமர் பெயர்!

தில்லி புறநகரில் அமைந்துள்ள மயூர் விஹார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ராமர் பெயர்...

News image
ஸ்ரீ ராம் மந்திர் மயூர் விஹார்- படம் - எக்ஸ்
Updated On :8 பிப்ரவரி 2026, 4:10 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லி புறநகரில் அமைந்துள்ள மயூர் விஹார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஸ்ரீ ராம் மந்திர் மயூர் விஹார் மெட்ரோ ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பல மாதங்களாக நீடித்துவந்த உள்ளூர் மக்களின், கோரிக்கையின் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெயர் மாற்றத்திற்குத் தேவையான நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தில்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான தில்லி மாநில பெயர்கள் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நகர உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்காக அமைக்கப்பட்ட 29 உறுப்பினர்கள் அடங்கிய இந்தக் குழு பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, புறநகரில் அமைந்துள்ள மயூர் விஹார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஸ்ரீ ராம் மந்திர் மயூர் விஹார் மெட்ரோ ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ நிலையம் அருகே ராமர் கோயில் அமைந்துள்ளதால், இப்பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.