டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

லாட்டரியில் ரூ. 49 கோடி வென்ற இளைஞர்!

லாட்டரியில் ரூ. 49 கோடி வென்ற இளைஞர் பற்றி...

News image
Updated On :6 பிப்ரவரி 2026, 6:05 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் பிரபல லாட்டரி குலுக்கலில் கர்நாடகத்தைச் சேர்ந்த இளைஞர் ரூ. 49 பரிசுத் தொகையை வென்றுள்ளார்.

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தின் கடப்பாடி மட்டு பகுதியைச் சேர்ந்த சாந்தனு ஷெட்டிகர். இவர் ஓமனில் பணிபுரிந்து வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் பிரபல லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.

இந்த நிலையில், குலுக்கலில் அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 20 மில்லியன் திராம் (இந்திய மதிப்பின்படி ரூ. 49 கோடி) பரிசுத் தொகை விழுந்துள்ளது.

பரிசு விழுந்த லாட்டரி சீட்டை 500 திராமுக்கு வாங்கியுள்ளார் சாந்தனு. இந்திய மதிப்பின்படி ரூ. 12,300 ஆகும்.

கடந்த சில நாள்களாக தொடர்ந்து லாட்டரி சீட்டு வாங்கிவரும் சாந்தனுவுக்கு இந்த முறை அதிர்ஷ்டம் அடித்து கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சாந்தனுவுக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.