டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

முதலிடத்தில் தென்னாப்பிரிக்கா! கடைசிப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை வென்றது!!

லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி குரூப்-டி பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டதைப் பற்றி...

News image
பந்தை விளாசிய தென்னாப்பிரிக்க அணி கேப்டன் எய்டன் மார்க்ரம்.- படம்: ஏபி.
Updated On :19 பிப்ரவரி 2026, 5:08 am

இணையதளச் செய்திப் பிரிவு

லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி குரூப்-டி பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

10-வது ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் -8 சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளன.

இந்த நிலையில், தில்லியில் உள்ள அருண் ஜேட்லி திடலில் இன்று (பிப்.18) நடைபெற்ற லீக் சுற்றின் 34 வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின.

அமீரக அணி ஏற்கெனவே தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் முதலில் அமீரக அணியைப் பேட்டிங் செய்ய அழைத்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய அமீரக அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 122 ரன்கள் மட்டும் எடுக்க முடிந்தது.

ஆல்-அவுட்டாகாத நிலையில், அந்த அணியில் இருந்த வீரர்கள் யாரும் தென்னாப்பிரிக்க அணியின் பந்து வீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறினர். யாரும் பெரியளவில் ரன் குவிக்காததால் அமீரக அணியால் 150 ரன்களைக்கூட கடக்க முடியவில்லை.

அந்த அணியில் அதிகபட்சமாக அலிஷன் ஷரஃபு ஒரு சிக்ஸர், 4 பௌண்டரிகளுடன் 45 ரன்களும், கேப்டன் வாசீம் 22 ரன்களும் அடித்தனர். தென்னாப்பிரிக்க அணித் தரப்பில் கார்பின் போஷ் 3 விக்கெட்டுகளும், ஆண்ட்ரிச் நார்க்கியா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர், 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களம்புகுந்த தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் எய்டன் மார்க்ரம் - விக்கெட் கீப்பர் டிகாக் இருவரும் நிதானமாகவும், அதேநேரத்தில் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

மூன்று ஓவர்களில் 32 ரன்கள் குவித்த நிலையில், டிகாக் 14 ரன்களில் ஆட்டமிழக்க, எய்டன் மார்க்ரம் 5 பௌண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 28 ரன்கள் எடுக்க, ரியான் ரிக்கெல்டான் 3 பௌண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 30 ரன்களும், பிரேவிஸ் ஒரு பௌண்டரி, 3 சிக்ஸர்களுடன் 36 ரன்களும் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்க அணி 13.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்து அபார வெற்றியைப் பதிவு செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.