/

பட்ஜெட்டில் முக்கிய பிரச்னைகள் புறக்கணிப்பு: ராகுல்

மத்திய பட்ஜெட்டில் நாட்டின் முக்கிய பிரச்னைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

News image
ராகுல் காந்தி - கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2026, 10:41 am

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய பட்ஜெட்டில் நாட்டின் முக்கிய பிரச்னைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

2026 - 27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் குறித்து பாஜகவினர் வரவேற்பளித்து வரும்நிலையில், எதிர்க்கட்சிகள் ஏமாற்றளிப்பதாகக் கூறுகின்றனர்.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, வீழ்ச்சியடைந்து வரும் உற்பத்தி, மூலதனத்தை இழந்துவரும் முதலீட்டாளர்கள், சரிந்து வரும் வீட்டு சேமிப்பு, விவசாயிகளின் நிலைமை, உலகளாவிய அதிர்ச்சி நிலைமை ஆகிய அனைத்தும் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டு விட்டன.

திருத்தம் செய்ய மறுக்கப்படும் இந்த பட்ஜெட், இந்தியாவின் நெருக்கடிகளைக் கண்டு கண்மூடித்தனமாய் இருப்பதாய் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.