மத்திய பட்ஜெட்டில் கேரளம் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2026- 27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று(பிப். 2) தாக்கல் செய்து உரையாற்றினார்.
தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிதாக எந்த அறிவிப்பும் இல்லை.
கடந்த பட்ஜெட்டின்போது பிகார் தேர்தல் நடைபெறவிருந்ததால் அந்த மாநிலத்திற்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின.
தமிழ்நாட்டிற்கு ரயில் சேவை உள்ளிட்ட ஒரு சில அறிவிப்புகள் இருந்தாலும் கேரளத்திற்கு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்று அந்த மாநில எம்.பி.க்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கேரளத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளத்திற்கு எதிரான கேரள மக்களுக்கு விரோதமான பட்ஜெட் என்று கையில் பதாகைகளுடன் கோஷமிட்டனர்.
மத்திய பட்ஜெட்டில் மக்களின் முக்கிய பிரச்னைகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் ஏமாற்றமளிக்கும் பட்ஜெட் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
summary
Opposition MPs from Kerala protest against Union Budget 2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்!

மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும் ஒரே துறை?

பட்ஜெட்டில் முக்கிய பிரச்னைகள் புறக்கணிப்பு: ராகுல்

முற்றிலும் விடுபட்டுப்போன கேரளம்: பட்ஜெட் குறித்து சசி தரூர்
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...


