டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அதிகபட்சமாக நிதித்துறைக்கு ரூ. 19 லட்சம் கோடி! துறை வாரியாக முழு விவரம்!

2026-27 ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் துறை ரீதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முழு விவரங்கள்...

News image
நிதியமைச்சகக் குழுவினருடன் அமைச்சர் நிர்மலா சீதாராமன்- படம் - பிடிஐ
Updated On :1 பிப்ரவரி 2026, 9:29 am

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய பட்ஜெட்டில் அதிகபட்சமாக நிதித்துறைக்கு ரூ. 19 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறைக்கு ரூ. 7 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், 83 நிமிடங்களுக்கு பட்ஜெட் அம்சங்கள் குறித்து உரையாற்றினார். இதில் பல்வேறு துறைகளுக்கான தொகையையும் ஒதுக்கீடு செய்துள்ளார்.

துறை ரீதியாக பட்ஜெட் ஒதுக்கீடு விவரங்கள்

வேளாண் துறை - ரூ. 1.4 லட்சம் கோடி

அணுசக்தித் துறை - ரூ. 24,123.92 கோடி

ஆயுஷ் துறை - ரூ. 4408.93 கோடி

ரசாயனம் மற்றும் உரத் துறை - ரூ. 177061.47 கோடி

விமான போக்குவரத்துத் துறை - ரூ. 2102.87

நிலக்கரி துறை - ரூ. 3635.32 கோடி

வணிகம் மற்றும் தொழில் துறை - ரூ. 17843.90 கோடி

உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை - ரூ. 2.39 லட்சம் கோடி

தகவல் தொடர்பு அமைச்சகத் துறை - 1.02 கோடி

கல்வித் துறை - ரூ. 139289.48 கோடி

பாதுகாப்புத் துறை - ரூ. 784678.28 கோடி

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை - ரூ. 21632.96 கோடி

சுற்றுச் சூழல், காடு, சூழல் மாற்ற நலத் துறை - ரூ. 3759.46 கோடி

நிதித்துறை - ரூ. 19,72509.48

வெளியுறவுத் துறை - ரூ. 22118.97 கோடி

புவி அறிவியல் துறை - ரூ. 3789.23 கோடி

கலாசாரத் துறை - ரூ. 3416.63 கோடி

பெருநிறுவன விவகாரங்கள் துறை - ரூ. 5561.86 கோடி

உள்துறை - ரூ. 255233.53 கோடி

நீர் வளத் துறை ரூ. 94807.84 கோடி

நீதித் துறை - ரூ. 5513.39 கோடி

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை - ரூ. 24566.27 கோடி

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை - ரூ. 68.45 கோடி

ரயில்வே துறை - ரூ. 281377.32 கோடி

சாலை மற்றும் போக்குவரத்துத் துறை - ரூ. 309875.30 கோடி

ஊரக வளர்ச்சித் துறை - ரூ. 197023.14 கோடி

சுற்றுலா துறை - ரூ. 2438.40 கோடி

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை - ரூ. 28183.06 கோடி

ஜவுளித் துறை - ரூ. 5279.01 கோடி

இளையோர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை - ரூ. 4479.88 கோடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.