டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புற்றுநோய் 17 மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு! 7 நோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரி குறைப்பு!

பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

News image
Updated On :1 பிப்ரவரி 2026, 7:23 am

இணையதளச் செய்திப் பிரிவு

புற்றுநோய் மற்றும் 7 அரிய நோய்களுக்கான மருந்துகளுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 - 27 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் இன்று(பிப். 1) தாக்கல் செய்து உரையாற்றினார்.

மருத்துவத் துறையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர், புற்றுநோய்க்குத் தேவையான 17 மருந்து வகைகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் மேலும் 7 அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கான இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

"நோயாளிகளுக்கு குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் 17 புற்றுநோய் மருந்துகள் மீதான அடிப்படை சுங்க வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும், அரிய நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள், மருத்துவப் பொருள்கள் இறக்குமதி செய்வதற்கு, இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கும் பட்டியலில் மேலும் 7 அரிய நோய்களைச் சேர்க்க முன்மொழிகிறேன்" என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.