நாட்டின் கிழக்கு - மேற்கு பகுதிகளை இணைக்க பிரத்யேக சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும் என பட்ஜெட் உரையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிறு காலை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 - 27 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் இன்று(பிப். 1) தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர், நாட்டில் 2 ஆம், 3 ஆம் நிலை நகர உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி, "நாட்டின் கிழக்கு - மேற்கு பகுதிகளை இணைக்க பிரத்யேக சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும். இது புதிய தொழில் வழித்தடமாக இருக்கும்.
2 ஆம், 3 ஆம் நிலை நகர உள்கட்டமைப்பு ரூ. 12.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கடலோர சரக்கு போக்குவரத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு.
2 ஆவது, 3 ஆவது நிலை நகரங்கள், கோயில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
சென்னை - பெங்களுரு, சென்னை - ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் தடம் அமைக்கப்படும்.
மும்பை - புணே, புணே- ஹைதராபாத், ஹைதராபாத் - பெங்களூரு, ஹைதராபாத் - சென்னை, சென்னை - பெங்களூரூ, பெங்களூரு - வாரணாசி, வாரணாசி - சிலிகுரி ஆகிய நகரங்களுக்கு இடையே 7 அதிவேக ரயில் தடங்கள் அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
summary
Budget 2026: high-speed rail track between Chennai, Bengaluru, and Hyderabad
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நிர்மலா சீதாராமன் கட்டியிருந்த காஞ்சிப் பட்டுப் புடவையின் பின்னணி!

ஆதிச்சநல்லூரில் கலாசார மையம் அமைக்கப்படும்!

ஜவுளித்துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

