தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை!
தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தனிநபர்களின் வருமான வரி வரம்பில் மாற்றமில்லை என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
பலரும் அதிகம் எதிர்பார்த்து வந்த தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டு இருந்ததே உச்ச வரம்பு நீடிக்கிறது.
புதிய வரி விதிப்பு முறையில்,
குறைந்தது ரூ. 4 லட்சம் வரை - வரி விதிப்பு இல்லை.
ரூ.4 லட்சம் - ரூ.8 லட்சம் வரை - 5 சதவிகிதம் வரி
ரூ.8 லட்சம் - ரூ.12 லட்சம் வரை - 10 சதவிகிதம் வரி
ரூ.16 லட்சம் - ரூ.20 லட்சம் வரை - 20 சதவிகிதம் வரி
ரூ.20 லட்சம் - ரூ.24 லட்சம் வரை - 25 சதவிகிதம் வரி
ரூ.24 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு 30 சதவிகிதம் வருமான வரி விதிக்கப்படும்.
இதுவே, பழைய வருமான வரிக் கணக்கு தாக்கல் முறையில், உச்சவரம்பு
ரூ.2.5 லட்சம் வரை - வரி விதிப்பு இல்லை.
ரூ.2.5 லட்சம் - ரூ.5 லட்சம் - 5 சதவிகிதம் வரி
ரூ.5 லட்சம் முதல் - ரூ.10 லட்சம் வரை - 20 சதவிகிதம் வரி
ரூ.10 லட்சத்துக்கு மேல் - 30 சதவிகித வரி விதிப்பு இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...